தனியார் பள்ளிக்கு நிகராக செயல்படும் குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 20 March 2022

தனியார் பள்ளிக்கு நிகராக செயல்படும் குனிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி.

தனியார் பள்ளிக்கு நிகராக செயல்படும் குனிச்சி  அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தை சாமியை  கர்மவீரர் காமராஜர் அவரின்  மறு அவதாரம் என்று மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் புகழாரம்.


திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட குனிச்சி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது, அந்த அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக குழந்தைசாமி பணியாற்றி வருகிறார் இந்த அரசு பள்ளிக்கு கிடைத்த வரப்பிரசாதமாக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


இவர் இப்பள்ளிக்கு வந்து பொறுப்பேற்று பணியில் அமர்ந்த திலிருந்து மிகவும் பின்தங்கி 40% சதவீதமாக இருந்த பள்ளியை தனியார் பள்ளிக்கு நிகராக 99% சதவீதம் தரம் உயர்த்துள்ளார், மாணவ மாணவிகள் கூறுகையில் எங்கள் தலைமையாசிரியர் பொறுப்பு ஏற்றதிலிறுந்து    பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 20க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் இருந்து இப்பள்ளிக்கு வருகிறோம் என்றும் இது அரசு பள்ளி இல்லை இது ஒரு தனியார்  பள்ளியில் படித்து வருவதாக  மன மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் இந்தப் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை எங்கள் தலைமையாசிரியர் செய்து கொடுத்திருக்கிறார் அதுமட்டுமின்றி எத்தனையோ  மாணவ மாணவிகளுக்கு அப்பா இல்லாமல் இருந்திருக்கலாம் ஆனால் எங்கள் தலைமையாசிரியர் அப்பா போல் கருதியும் எங்களை பிள்ளைகள் போல் பாதுகாப்பதிலும் அரவனைப்பதிலும்  இவருக்கு நிகர் யாருமில்லை என்றும் இவர் எங்கள் பள்ளிக்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று கண்ணீர் மல்க கூறுகின்றனர். 


பெற்றோர் கூறுகையில் : தனியார் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளை பார்த்து எங்கள் பிள்ளைகள் ஒரு ஏக்கத்தோடு பார்க்கும் அந்த ஏக்கத்தை போக்க இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக  வந்ததில் இருந்து தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் இப்பள்ளிக்கு விரும்பி  வந்து சேர்ந்துள்ளனர் அந்த அளவிற்கு படிப்பிலும் விளையாட்டிலும் கல்வியும் தரம் உயர்த்தியுள்ளார் 


அதுமட்டுமின்றி இவர் வாங்கும் சம்பளத்தில் ஒரு பங்கை இப்பள்ளிக்காக செலவழித்து வருகிறார் சொந்த பணத்தை கொண்டு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூடுதலான கழிப்பறைகள் வகுப்பறைகள் சுற்றுச்சுவர் இப்பள்ளிக்கு வர்ணம்  தீட்டுதல் விளையாட்டுப் பொருட்கள் கூடுதலாக ஆங்கில கல்வி வழி வேலைவாய்ப்பு பயிற்சி பள்ளி  மருத்துவ வசதிகள் உள்ளிட்ட  பல்வேறு நல்ல திட்டத்தை கொண்டு இப்பள்ளியை மேம்படுத்தி வருகிறார் என்றும், கொரோனா ஊரடங்கிய  காலத்தில் அன்றாட கிடைக்கும் வேலைகளை செய்து வாழ்ந்து வந்த எங்களுக்கு கொரோனாவால் முடங்கி  காலகட்டத்தில்   எங்களைப்போல் வறுமையில் உள்ளவர்களை மாணவ மாணவியர்கள் மூலம் கண்டறிந்து அவருடைய சொந்த பணத்தை கொண்டு குடும்பத்திற்கு தேவையான அரிசி பருப்பு எண்ணெய் காய்கறி போன்ற மளிகை தொகுப்புகளை  வீடு வீடாக சென்று வழங்கி வந்தார்.


அதுமட்டுமின்றி இவர் எங்கள் குடும்பத்தில் ஒரு சகோதரர்களாக நினைத்து பாவித்து வருகிறோம் இவர் மாணவ மாணவிகளை தன் பிள்ளைகள் போல் கருதி வழிநடத்தி வருகிறார் இப்பள்ளிக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக கருதுகிறோம் கர்மவீரர் காமராஜர் மறுஅவதாரம் இவர் என்று கண்ணீர் மல்க கூறுகின்றனர், 


பொதுமக்கள் கூறுகையில் : இந்த அரசு பள்ளிக்கு பணியில் அமர்ந்த திலிருந்து தனியார் பள்ளிக்கு நிகராக தரம் உயர்த்தி உள்ளார் இப்பள்ளியில்  பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு இவருடைய சொந்த பணத்தை கொண்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார் மற்றும் பள்ளிகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கூடுதல் கழிப்பறைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைக்கான அடிப்படை. வசதிகள் செய்தார் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad