கோயிலுக்கு நேந்து விட்ட கன்று குட்டி இறந்தால் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள், - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 1 April 2022

கோயிலுக்கு நேந்து விட்ட கன்று குட்டி இறந்தால் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்,

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கசினாயக்கன் பட்டி  வக்கீல் அய்யர் தோப்பு பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சிறிய கன்று குட்டியை பெருமாள் அப்பன் கோவிலுக்கு நேந்து விட்டனர், இந்த கன்று குட்டி அப்பகுதி மக்களின் வீட்டிற்கு சென்று உணவருந்தியும் தண்ணீர் குடித்தும் வருவது வழக்கம் மேலும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இந்த கன்று குட்டியை தங்கள் வீட்டுப் பிள்ளைகள் ஆகவே கருதிவந்தனர்.


இந்த நிலையில் தற்போது மூன்று வயதான நிலையில் மர்மமான முறையில் விவசாய நிலத்தில் இறந்து கிடந்தது, இதனை பார்த்த அப்பகுதி மக்கள் மனிதனுக்கு செய்ய கூடிய அனைத்து ஈமச்சடங்குகளையும் அந்த கன்று குட்டிக்கும் செய்தும் அடக்கம் செய்தனர், இந்த கிராம மக்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளாக கருதிய இந்த கன்று குட்டியின் இறப்பு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad