SRDPS நிறுவனத்தில், மனித கடத்தலை தடுத்தல் கருத்துப்பட்டறை முகாம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 24 March 2022

SRDPS நிறுவனத்தில், மனித கடத்தலை தடுத்தல் கருத்துப்பட்டறை முகாம்.

திருப்பத்தூர் மாவட்டம் SRDPS உஜ்வாலா பெண்கள் மற்றும் குழந்தைகள் மறுவாழ்வு இல்லத்தில், மனித கடத்தலை தடுத்தல் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்து பட்டறை 24/03/20222 இன்று நடைபெற்றது.


இந்த நிகழ்விற்கு SRDPS நிர்வாக இயக்குனர் திருமதி. N.தமிழரசி அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உயர்திரு. வில்சன் ராஜசேகர் அவர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றினார். பெண்கள் மீதான தாக்குதல்கள், குழந்தைகள் தொழிலாளர்களாக பயன்படுத்துவது, பிச்சை எடுத்தல், உடலுறுப்பு பாகங்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதை நாம்  எப்படி தடுப்பது? அரசோடு இணைந்து எப்படி செயல்படுவது? என்பதைப் பற்றி மிகச் சிறப்பாக பேசினார். SRDPS தொண்டு நிறுவனத்தின் தொடக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மறுவாழ்வு பணிகள் என்ன என்பதை வருகை தந்த மாணவர்களுக்கு காணொளி மூலமாக விளக்கப்பட்டது.


திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், திரு. திருமாவளவன் அவர்கள், ஆம்பூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர், திருமதி ராணி, சமூக ஆர்வலர் ராதாகிரு்ட்டிணன், செல்வி. அம்மு வழக்குரைஞர் உட்பட கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். 


அமிர்தாலயா  கல்வியியல் கல்லூரி, காரியம்பட்டி அரசு கலைக் கல்லூரி, பாலக்கோடு கலைக்கல்லூரி, யூனிக் கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் பேராசிரியர்கள் என்று 100 மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில், மனித கடத்தலை தடுத்தல் பற்றிய தகவல்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக கலந்து கொண்ட மாணவர்கள் தெரிவித்தனர். 


கலந்து கொண்ட அனைவருக்கும் SRDPS சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. வருகை தந்த அனைவருக்கும் நண்பகல் உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. நிறைவாக SRDPS தொண்டு நிறுவன சமூகப் பணியாளர் திரு. மங்கள்குமார் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

No comments:

Post a Comment

Post Top Ad