100 நாள் வேலை வழங்குவதில் முறைகேடு உள்ளதாக கூறி ஊராட்சி மன்ற தலைவரின் கணவனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 1 April 2022

100 நாள் வேலை வழங்குவதில் முறைகேடு உள்ளதாக கூறி ஊராட்சி மன்ற தலைவரின் கணவனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.

நாட்றம்பள்ளி அருகே 100 நாள் வேலை வழங்குவதில் முறைகேடு உள்ளதாக கூறி  ஊராட்சி மன்ற  தலைவரின் கணவனை  கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு அரசு பேருந்தை சிறை பிடித்ததால் பரபரப்பு.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த தெக்குபட்டு ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடியின் கணவர் யுவராஜை கண்டித்து அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலலில் ஈடுபட்டு அரசு பேருந்தை சிறைபிடித்தனர்.


அப்போது பொதுமக்கள் கூறுகையில் 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடியின்  கணவர் யுவராஜ் தன்னுடைய உறவினர்களுக்கு மட்டும் வேலை வழங்குகிறார் என்றும் வெளியூரிலிருந்து ஆட்களை வரவழைத்து 100 நாள் வேலை திட்டம் மூலம் பணி வழங்குவதாகதால் அதனைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபடுவதாக கூறினர். 


இதனைத் தொடர்ந்து நாட்றம்பள்ளி  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து  பொதுமக்கள் பேருந்தை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர், இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad