தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மர்ம நபர்கள் கேமராவை உடைத்து கொள்ளை முயற்சி! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 1 April 2022

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மர்ம நபர்கள் கேமராவை உடைத்து கொள்ளை முயற்சி!

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் C-2513 கந்திலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர் லோன், விவாசாயகடன், மகளிர் கடன், நகைகடன், மற்றும் பொது நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறது.


கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கந்திலி, சின்னகந்திலி, மதனவாடி, பள்ளத்தூர், மோட்டூர், மண்டல நாயனகுண்டா, தோக்கியம், கெஜல்நாயக்கன்பட்டி,குமடிகாண்பட்டி, நார்சாம்பட்டி, பரிதேசிபட்டி, உள்ளிட்ட சுமார் 13 பஞ்சாயத்துகளில் உள்ள கிராம மக்கள் இந்த கந்திலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலமாக பயன் பெற்று வருகின்றனர்.


இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கூட்டுறவு சங்கத்தை மேனேஜர் பெரியசாமி மூடிவிட்டு சென்றுவிட்டதாக தெரிகிறது, அதனை தொடர்ந்து நேற்று இரவு மர்ம நபர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் இருந்த இரண்டு கேமராக்களை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்ததாக தெரிகிறது.


இந்த நிலையில் காலையில் வேலைக்கு வந்த வாட்ச்மேன் நாராயணன் சிசிடிவி கேமரா உடைக்கப்பட்டு இருந்ததை அறிந்து மேனேஜர் பெரியசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார், பின்னர் பெரியசாமி கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தின் பெயரில் கூட்டுறவு கடன் சங்கத்தில் விரைந்து வந்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர், மேலும் இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் சிசிடி கேமரா உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad