வாணியம்பாடி அருகே 2வது முறையாக கள்ள சாராயம் விற்கும் வீட்டை முற்றுகையிட்ட கிராம மக்கள், - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 4 April 2022

வாணியம்பாடி அருகே 2வது முறையாக கள்ள சாராயம் விற்கும் வீட்டை முற்றுகையிட்ட கிராம மக்கள்,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நேதாஜி நகர், இந்திரா நகர், காமராஜ் நகர்,லாலா ஏரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாக அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் காவல் நிலையம் முதல் முதல்வர் தனிப்பிரிவு வரை பல மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். 


இந்நிலையில்  கடந்த மாதம் 07.03.2022 ஆம் தேதி சாராய விற்பனை செய்யும் கொட்டகை மற்றும் சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி கிராம மக்கள் சாலையில் கொட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாராய கொட்டகைக்கு தீ வைத்து எரித்து காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை  தொடர்ந்து காவல்துறையினர் சாராயம் விற்கும் கும்பலை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் கைது செய்தனர்.  சாராய கும்பலின் தலைவி முக்கிய குற்றவாளியான மகேஸ்வரியை இதுவரையும் கைது செய்யவில்லை. இந்நிலையில் இன்று காமராஜ் நகர் பகுதியில் மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீட்டில் சாராயம் விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.


காவல்துறையினர் இதை கண்டுகொள்ளவில்லை  என்பதால் கிராம மக்கள்  ஒன்று சேர்ந்து சாராயம் விற்கும் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது சாராயம் விற்றுகொண்டிருந்த 2 இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். அப்போது அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட கள்ள சாராய முட்டைகளை  கைப்பற்றி கிராம மக்கள் உயரதிகாரிகளுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சாராய பாக்கெட்டுகளை காவல்துறையினர் கொண்டு செல்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முக்கிய குற்றவாளியை கைது செய்யாதது சாராய விற்பதற்கு முக்கிய காரணம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கிராம மக்களே சாராயம் விற்றுக்கொண்டிருந்த  சதீஷ் குமார் என்ற இளைஞர் விரட்டி சென்று பிடித்து  காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் இப்பகுதியில் கள்ளச்சாராய விற்பனைக்கு போலீஸார் முழுக்க முழுக்க துணையாக உள்ளார் என்பது பகுதி மக்களின் குற்றச்சாட்டாகும்.


2வது முறையாக கிராம மக்களே சாராயம் விற்கும் இடத்தை முற்றுகையிட்டு சாராய முட்டைகளை  கைப்பற்றிய  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad