ஆம்பூரில் தனியார் தொழிற்சாலை வாகன விபத்து; நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 4 April 2022

ஆம்பூரில் தனியார் தொழிற்சாலை வாகன விபத்து; நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்ய கோரி விசிக ஆர்ப்பாட்டம்.

ஆம்பூரில் விபத்தில் படுகாயம் அடைந்த காலனி தொழிற்சாலை பெண் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்ககோரி  தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் காலனி தொழிற்சாலை (ஆஸ்டன் ஷூஸ்)  30க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களை வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏற்றிக்கொண்டு ஆம்பூர் நோக்கி கடந்த 31.03.2022 அன்று வேன் வந்து கொண்டிருந்த போது சோலூர் என்ற இடத்தில் வேன் ஓட்டுனர் நிலைதடுமாறி லாரி மீது மோதிய விபத்துக்குள்ளானதில் பெண் தொழிலாளர்கள் 2 பேர் உட்பட ஓட்டுநர் உயிரிழந்தார்.


இவ்விபத்தில் மேலும்  படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க கோரியும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய கோரியும் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சந்திரன் தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad