தன்பாத் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 25 கிலோ கஞ்சா. ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறை கைப்பற்றியுள்ளது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 4 April 2022

தன்பாத் ரயிலில் கேட்பாரற்று கிடந்த 25 கிலோ கஞ்சா. ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறை கைப்பற்றியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல்துறையால் சுமார் இரண்டரை  லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சாவை தன்பாத் ரயிலில் கேட்பாரற்று கிடந்த நிலையில் கைப்பற்றியுள்ளனர். 


சமீப தினங்களாக வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலமாக தமிழகத்திற்கு கஞ்சா கடத்தப்படுவதும் தொடர்ந்து காவல்துறையால் பறிமுதல் செய்யப்படுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது, இது எதிர்கால சந்ததியை அச்சுறுத்தும் மிகப்பெரிய சமூக சீர்கேடு என்பதால் காவல்துறை மிக கவனமுடன் செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் இளவரசிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் காவலர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.


இதனை தொடர்ந்து இன்று அதிகாலை  3 மணிக்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்த தன்பாத் எக்ஸ்பிரஸில் சோதனையிட்ட பொழுது கழிவறையின் ஓரமாக 3 பைகளில் கஞ்சா இருப்பதை கண்டறிந்தனர், பின்பு அதனை மீட்டு வழக்கு பதிந்து சேலம் கோட்டத்திற்குட்பட்ட  நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.


இரு தினங்களுக்கு முன்பு இதே தன்பாத் ரயிலில்  10 கிலோ கஞ்சா கடத்திய வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad