இந்த விழாவை டெல்லி கால்நடை வளர்ப்பு முனைப்பு அலுவலகத்திலிருந்து வந்த அதிகாரி மிட்டல் திருப்பத்தூர் மாவட்ட துணை ஆட்சியர் லட்சுமி மற்றும் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோருடன் சென்று எருதுவிடும் பாதையில் காளைகளுக்கு உள்ள பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்த பின்பு அனைத்துவித பாதுகாப்புகளும் ஏற்படுத்தப்பட்டதை அறிந்து விழாவை நடத்த அனுமதி அளித்து சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட தொலைவை குறைந்த நொடியில் சீறிப்பாய்ந்த காளைகளுக்கு முதல் பரிசாக 65 ஆயிரம் ரூபாயும் இரண்டாவது பரிசாக 55 ஆயிரம் பரிசு என சுமார் 35 வரையலான பரிசுகள் காளைகளுக்கு வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment