3வது முறையாக மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 April 2022

3வது முறையாக மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி சாலை அருகே அமைந்துள்ள தனியார் திருமண வளாகத்தில் தமிழ்நாடு அமைச்சர் ஆணழகன் மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆணழகன் அமைப்பு சார்பாக ஒலிம்பியா உடற்பயிற்சி ஆசிரியர் மணிவண்ணன் தலைமையில் மூன்றாவது முறையாக ஆணழகன் போட்டி நடைபெற்றது.

தமிழகம் முழுவதுமுள்ள முப்பத்தி எட்டு மாவட்டங்களில் இருந்தும் உடற்பயிற்சி கூடங்களில் தீவிரமாக உடற்பயிற்சி செய்து கட்டுக்கோப்பாக உடலை வைத்திருக்கும் ஆண்களுக்கு ஒலிம்பியா கிளாசிக் 2022 என்கிற தலைப்பில் திறந்தவெளி ஆணழகன் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் சுமார் 50க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் 55 கிலோ எடை பிரிவில் இருந்து 85 கிலோ எடை பிரிவு வரை பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர், வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு கேடயம் பதக்கம் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உடற்பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad