குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை கடப்பாறையால் அடித்துக் கொன்ற கணவன் கைது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 12 April 2022

குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை கடப்பாறையால் அடித்துக் கொன்ற கணவன் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியை சேர்ந்த பெருமாள் (40) பெங்களூரில் பில்டிங் காண்ட்ராக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார் இவர் பொம்மிகுப்பம்  பகுதியை சேர்ந்த துர்கா தேவி (35) என்பவருடன் 16 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி கிருபாகரன் (15) யுவராஜ் (13) என இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.


இந்த நிலையில் பொம்மிகுப்பம் பகுதியில் உள்ள துர்கா தேவியின் தாயார்  விஜயலட்சுமி வீட்டிற்கு  அடுத்த வாரம் ஆதி ஊரில் நடைபெற உள்ள திருவிழாவிற்கு அழைக்க பெருமாள் மற்றும் துர்க்கா தேவி இருவரும் சென்றனர்.


அப்போது கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது அப்போது கோபமுற்ற பெருமாள் திடீரென வீட்டில் வைக்கப்பட்டிருந்த கடப்பாறையை எடுத்து துர்கா தேவியின் தலையின் மீது தாக்கியதில் நிலைகுலைந்து சுருண்டு விழுந்தார் 


பின்னர் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் துர்காதேவியை ஷேர் ஆட்டோவில் எடுத்துச் சென்றனர் அப்போது செல்லும் வழியிலேயே பரிதாபமாக துர்காதேவி உயிரிழந்தார்.


பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், பின்னர் சம்பவம் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து வருகின்றனர் 


போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் துர்காவின் அக்காவான முல்லைக்கொடி மீது தான் ஒரு தலைப்பட்சமாக காதலித்து வந்ததாகவும் அதன் காரணமாகவே கொலை செய்ததாகவும் பெருமாள் கூறியதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad