காவல்துறை சார்பில் இலக்கிய திருவிழாவில் காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 8 April 2022

காவல்துறை சார்பில் இலக்கிய திருவிழாவில் காவல் உதவி செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலை அருகே அமைந்துள்ள தூய நெஞ்சக் கல்லூரியில் கடந்த ஏழு நாட்களாக இலக்கிய திருவிழா நடைபெற்று வருகிறது. சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான புத்தகங்கள் அடங்கிய இந்த இலக்கிய திருவிழாவில் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வந்து கண்டு களித்து செல்கின்றனர்.



இந்நிலையில்  மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக வந்துசெல்லும் இடமாக இருப்பதால் காவல் உதவி செயலியை அனைவரிடமும் கொண்டு போய் விரைவாக சேர்க்கும் பொருட்டு திருப்பத்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் தலைமையில் நகர காவல் ஆய்வாளர் ஹேமாவதி மற்றும் காவலர்கள் இன்று முகாம் அமைத்து சுமார் 500-க்கும் மேற்பட்டோரிடம் காவல் செயலியின் முக்கியத்துவம் மற்றும் அதை எப்படி அவரவர் மொபைலில் பதிவிறக்கம் செய்வது எப்படி ஆபத்து வரும் பொழுது அதை பயன்படுத்துவது உள்ளிட்ட விளக்கங்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.



அப்போது காவல் உதவி செயலி ஒரு காவலர் எப்பொழுதும் தங்களுடன் இருக்கிறார் என்கிற அளவிற்கு முக்கியத்துவம்  வாய்ந்தது என்பதை உணர்ந்த மாணவிகள் மற்றும் பொதுமக்கள்  சுமார் 250க்கும் மேற்பட்டோர் அதே இடத்தில் பதிவிறக்கம் செய்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad