ஜோலார்பேட்டை அருகே 30 சவரன் நகை மற்றும் ரொக்கப்பணம் கொள்ளைபோன சம்பவத்தால் பரபரப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 3 April 2022

ஜோலார்பேட்டை அருகே 30 சவரன் நகை மற்றும் ரொக்கப்பணம் கொள்ளைபோன சம்பவத்தால் பரபரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பக்கிரி தக்கா  கேபி வட்டம் பகுதியில் வசிப்பவர் வீரபத்திரன்(55) அவரது மனைவி பத்மா(48) இவர்களுக்கு பிரகாஷ்(32) பிரதாப்(27) சரளாதேவி (30)  ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.


பிரகாஷ் மற்றும் அவரது மனைவி ஸ்ரீமதி  இருவரும் சென்னையில் வசித்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு  அவர்களின் வீட்டிற்கு  வீரபத்திரன் பத்மா இருவரும் சென்றுள்ளனர்.  


வீரபத்திரனின் இளைய மகன் பிரதாப் மட்டும் தனியாக வீட்டில் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் பிரதாப் உறங்கி  கொண்டிருந்த அறைக்கு பக்கத்தில் இருந்த அறைக்குள் நுழைந்து அருகாமையில் இருந்த அலமாரியில் இருந்த சாவியை எடுத்து செய்கூலி சேதாரம் இல்லாமல் சுமார் 30 சவரன் நகை மற்றும் ரொக்கப் பணம் 2000 ரூபாய் விலை உயர்ந்த செல்போன் மற்றும் வெள்ளி கொலுசு ஆகியவற்றை  கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
காலை எழுந்து வந்து பக்கத்து அறைக்குள் நுழைந்த பிரதாப் பீரோ திறந்த நிலையில் துணிமணிகள் கலந்திருப்பதை   பார்த்து அதிர்ச்சியடைந்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை  காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி கொள்ளை போன சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad