இந்தியன் வங்கி சார்பில் பெண்களுக்கான சுயவேலைவாய்ப்பு பயிற்சி முகாம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 4 April 2022

இந்தியன் வங்கி சார்பில் பெண்களுக்கான சுயவேலைவாய்ப்பு பயிற்சி முகாம்.

திருப்பத்தூர் மாவட்டம் இந்தியன் வங்கி மற்றும் ஏகே மாவட்ட ஊராட்சி இணைந்து நடத்தும் பெண்களுக்காக சுயத்தொழில் வேண்டுமென்று மனதில் வைத்து (மசாலா பேக்கிங் மற்றும் ஊறுகாய் தயாரித்தல்) என சுய தொழிலுக்கு பயிற்சி முகாம் துவக்க விழா இன்று நடைபெற்றது.

இந்த பயிற்சி 10நட்கள் நடைபெறும் அதாவது 4/4/2022முதல்14/4/2022 வரை காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும், இன்று ஒரு நாள் மட்டும் திருப்பத்தூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது, இதில் 35 பெண்களுக்கு முதல் கட்ட பயிற்சி நடைபெற்றது.


பயிற்சியின்போது காலை, மாலை இரு வேளை தேநீர் மற்றும் உணவு வழங்கப்படும், பயிற்சி முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் சிறப்பாக பயிற்சி பெறும் நபர்களுக்கு வங்கி கடன் மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும் வங்கி மேலாளர்கள் கூறினார்கள், 


இந்த முகாமில் வேர்கள் அறக்கட்டளை தலைவர் வடிவேல் சுப்ரமணியன் தலைமை தாங்கினார், ஊராட்சி மன்ற தலைவர் பு.வேலு, கவுன்சிலர் ராமலிங்கம், ஊராட்சி துணைத்தலைவர் சிவப்பிரகாசம் துணைத் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad