50 பவுன் தங்க நகை மற்றும் 2லட்ச ரூபாய் கொள்ளை! மறைத்து வைத்திருந்த பீரோவின் சாவியை எடுத்து திறந்து மர்ம நபர்கள் கைவரிசை! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 8 April 2022

50 பவுன் தங்க நகை மற்றும் 2லட்ச ரூபாய் கொள்ளை! மறைத்து வைத்திருந்த பீரோவின் சாவியை எடுத்து திறந்து மர்ம நபர்கள் கைவரிசை!

திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சி அடுத்த செல்வானூர் பகுதியைச் சேர்ந்த தாஸ் (34) சென்னையில் 108 ஆம்புலன்சில் அவசரகால மருத்துவ நுட்புனாராக பணிபுரிந்து வருகிறார், இந்த நிலையில் இவருடைய தாயாரான நாகராணி மற்றும் இவருடைய மனைவி சத்யா இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.


அதனைத் தொடர்ந்து இன்று விடியற்காலை 3 மணி அளவில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் குடும்பத்தார் துணிக்குள்  மறைத்து வைத்திருந்த பீரோவின் சாவியை எடுத்து பீரோவைத் திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் தங்க நகை மற்றும் இரண்டு லட்ச ரூபாயை திருடிச் சென்றுள்ளனர்.

இந்த தங்க நகை மற்றும் பணம் முழுவதும் தாஸின் தம்பியான தசரதனுக்கு வருகின்ற 15ஆம் தேதி திருமணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்டவை ஆகும்.


இதனைத் தொடர்ந்து இன்று நாகராணி பணம்பாக்கு செய்ய  3 மணி அளவில்  பீரோவைத் திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டு இருந்த பணம் மற்றும் நகைகள் எதையும் காணவில்லை இதன் காரணமாக பல மணி நேரம் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.


இச்சம்பவம் குறித்து கந்திலி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் பணம் திருடு போன வீட்டிற்கு விரைந்து வந்த போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை வருகிற மேற்கொண்டு வருகின்றனர், மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை மேற்கொள்வதாகும் தகவல் தெரிவித்தனர்.


மேலும் இச்சம்பவம் குறித்து பீரோவின் சாவி மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டறிந்து அருகில் உள்ள அக்கம்பக்கத்தினரே திருடி சென்றுள்ளனரா? அல்லது மர்ம நபர்கள் எவரேனும் எடுத்துச் சென்றுவிட்டனரா? என்ற வண்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


அடுத்த வாரத்தில் திருமணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்ட பணம் நகை கொள்ளை போன சம்பவம் குடும்பத்தினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad