பல வருடங்களாக சேமித்து வைத்த வெற்றி சான்றிதழ்கள் மழைநீரில் நனைந்து நாசம்! இருக்க இருப்பிடம் கேட்டு உதவி கோரி நிற்கும் வீர விளையாட்டு கலைக்கூடம்! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 7 April 2022

பல வருடங்களாக சேமித்து வைத்த வெற்றி சான்றிதழ்கள் மழைநீரில் நனைந்து நாசம்! இருக்க இருப்பிடம் கேட்டு உதவி கோரி நிற்கும் வீர விளையாட்டு கலைக்கூடம்!

திருப்பத்தூர் பல வருடங்களாக சேமித்து வைத்த வெற்றி சான்றிதழ்கள் மழைநீரில் நனைந்து நாசம்! இருக்க இருப்பிடம் கேட்டு உதவி கோரி நிற்கும் வீர விளையாட்டு கலைக்கூடம்!  


திருப்பத்தூரின் வீர விளையாட்டு கலைக்கூடமாக திகழ்வது  பாரத் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் கராத்தே பயிற்சி பள்ளியாகவும் மற்றும் கல்லூரி ஆகவும் திகழ்கிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவ/ மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பம், குங்பூ, பரதநாட்டியம், வால்வீச்சு, போன்ற 15 வகையான தற்காப்புக் கலைகள் பயிற்சி அளிக்கப்படுகின்றன. 

பள்ளி மாணவ மாணவிகள் அகில இந்திய அளவிலும் இன்டர்நேஷனல் அளவிலும் பல பதக்கங்களை வென்று சாதனை படைத்து வருகின்றனர். இப்பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவர்கள் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் நான்கு தங்கப் பதக்கமும் 3 வெள்ளி பதக்கமும் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். 


அது மட்டுமின்றி ஐந்து வயதில் 5 வகையான புத்தகத்தில் இடம் பெற்று உலக சாதனை படைத்த மாணவர்களும் உண்டு இந்த வெற்றி தமிழகத்திற்கு மிகவும் பெருமை சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் நிதி பிரச்சினை காரணமாக தமிழக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.


தமிழக அரசு நிதி உதவி செய்து கொடுத்தால் இந்தியாவுக்காக தங்க பதக்கம் வென்று தருவதே இவர்களின் முக்கிய குறிக்கோளாக கொண்டு உள்ளனர்.இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பெய்த கனமழையின் காரணமாக  இவர்களுடைய கலைக்கூடத்தில் மழைநீர் உள்ளே புகுந்ததால் பல வருடங்களாக  கலைக் கூடத்தில் இலவசமாக பயின்று வரும் 50க்கும் மேற்பட்ட பிள்ளைகள் தங்களது வெற்றியை பதிவு செய்த சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகள் அனைத்தும் மழையில் நனைந்து நாசமாயின.


இதன் காரணமாக தமிழக முதல்வருக்கு திருப்பத்தூரில் தங்களுக்கு என தனி இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் இந்த வீர விளையாட்டு கூடத்தில் பயின்று வரும் மாணவ மாணவிகளின் எதிர்காலம் மற்றும் நாட்டுப் புறக் கலையை மீட்டெடுக்கும் முயற்சியை கருத்தில் கொண்டாவது தமிழக முதல்வர் எங்களுக்கு வழி வகுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad