திருப்பத்தூர் நகராட்சி முதல் நகரமன்ற கூட்டம், சலசலப்பில் தொடங்கியது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 8 April 2022

திருப்பத்தூர் நகராட்சி முதல் நகரமன்ற கூட்டம், சலசலப்பில் தொடங்கியது.

திருப்பத்தூர் நகராட்சியில் நடைபெற்ற முதல் நகரமன்ற கூட்டத்தில் வெற்றி பெற்று வந்த நகரமன்ற உறுப்பினர் ஆளுமை செய்ததால் வாய் பேசாமல் இருந்த நகரமன்றத் தலைவர்.


திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தலில் வெற்றி பெற்ற நகரமன்ற உறுப்பினர்கள் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் கலந்துகொண்டனர், அப்போது பல்வேறு வார்டுகளில் வெற்றி பெற்ற நகரமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும்  திமுக சார்பாக 2வது வார்டில் வெற்றி பெற்ற நகரமன்ற உறுப்பினர் குட்டி பதிலளித்துக் கொண்டிருந்தார்.


இதனைத் தொடர்ந்து 31 வது வார்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற நகரமன்ற உறுப்பினர் டிடிசி சங்கர் 60 வருடமாக அரசு புறம்போக்கு இடத்தில் வசித்த அதிமுகவை சேர்ந்த நபரின் வீட்டை கால அவகாசம் கொடுக்காமல் இடித்தது ஏன் என்றும் அவர்கள் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்கிற பாகுபாடா என்றும் கேள்வி எழுப்பினார். அதற்கும் நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் பதில் ஏதும் கூறாத நிலையில் சக வார்டு உறுப்பினர் குட்டி மட்டுமே பதிலளித்துக் கொண்டிருந்தார்.


இதனால் சக நகரமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முகம் சுழித்தபடி அமர்ந்திருந்தனர், மேலும் சுடுகாட்டில் எரி மேடையில் உள்ள பிணங்களை எரிவாயு இயந்திரத்தின் மூலம் எரிக்க நகராட்சியில் வசூலிக்கப்படும் தொகையின் அளவை பாதியாக குறைக்க வேண்டும், பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களுக்கு நகராட்சி ஆணையர் நகர மன்றத் தலைவரும் நேரடியாக வந்து பார்வையிட்டு அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். 


மேலும் நகர்மன்ற முதல் கூட்டத்தில் சொத்துவரி உயர்த்துவது  குறித்த தீர்மானத்தை மட்டும் நிறுத்திவைத்து மற்ற பல்வேறு நலத்திட்ட தீர்மானங்களை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றினர். 

No comments:

Post a Comment

Post Top Ad