திமுக சார்பில் 6 இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 April 2022

திமுக சார்பில் 6 இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரப்பகுதிகளில் தூய நெஞ்சக் கல்லூரி முதல் வீட்டு வசதி வாரியம் வரை சுமார் 6 இடங்களில் மாவட்ட செயலாளர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ்  தலைமையில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டன.

கோடையின் தாக்கம் துவங்கியுள்ள நிலையில் சாலையோரமாக கடந்துசெல்லும் பொதுமக்களுக்கு தாகத்தை தணிக்கும் விதமாக தூய நெஞ்சக் கல்லூரி, பழைய பேருந்து நிலையம், மீனாட்சி நிலையம், புதுப்பேட்டை ரோடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி மற்றும் சின்னக்கடை வீதி ஆகிய பகுதிகளில் திமுக சார்பாக தர்பூசணி இளநீர் உள்ளிட்ட கோடைகால பழங்களையும் தண்ணீர் பானைகள் வைத்து பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. 


அப்போது திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் நகர செயலாளர் ராஜேந்திரன் உட்பட ஏராளமான திமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/