தலைமையாசிரியர்களுக்கும் பதவி உயர்வு வேண்டும் - மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 10 April 2022

தலைமையாசிரியர்களுக்கும் பதவி உயர்வு வேண்டும் - மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி சாலை அருகே அமைந்துள்ள கார்த்திக் மேஸ்ட்ரோ தமிழ் கலைக் கூடத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் சார்பாக மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் ரவிச்சந்திரன் தலைமையிலும் மாவட்ட அமைப்பு செயலாளர் குழந்தைசாமி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையிலும் நடைபெற்றது.


அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில், மேல்நிலைக் கல்வி துவங்கப்பட்டு 44 ஆண்டுகள் ஆகியும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாகவே பணிபுரிந்து ஓய்வு பெறும் அவல நிலை உள்ளது. எனவே பணி நியமன விதியை மாற்றி அமைத்து மாவட்ட கல்வி அலுவலக இடத்தை பதவி உயர்வு இடமாக மாற்ற வேண்டும்.


பள்ளிகளில் கடைநிலை ஊழியர்களின் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. உடனடியாக சட்டமன்ற கூட்டத்தொடரில் கடைநிலை பணியாளர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும், 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு மட்டும் மதிய உணவு திட்டம்  வழங்கப்படுகிறது. அதை மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும் வழங்க வேண்டும்.


6 முதல் 12 வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் விடை மற்றும் வினா தாள்களுக்கு  பள்ளிக்கல்வித்துறை பணம் வசூலிக்க சொல்கிறது. ஆனால் அதை தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாக கூறினார்.


இதனை தொடர்ந்து மாநில பொதுக்குழு கூட்டத்தில் உள்ள ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, மேலும் இக்கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட நிர்வாகிகள் என  சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad