60 வருடமாக வசித்து வந்த வீட்டை கட்சியின் காழ்புணர்ச்சி காரணமாக நகராட்சி இடித்து தரைமட்டம், பெண் தீக்குளிக்க முயற்சி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 April 2022

60 வருடமாக வசித்து வந்த வீட்டை கட்சியின் காழ்புணர்ச்சி காரணமாக நகராட்சி இடித்து தரைமட்டம், பெண் தீக்குளிக்க முயற்சி.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 17 வது வார்டு ஸ்ரீ லக்ஷ்மி ஐயர் தெருவில் வசிப்பவர் சேகர் மகன் விவேகானந்தன், இவர் சுமார் 60 வருடங்களாக குடும்பத்துடன் அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வருகிறார்.


இந்நிலையில் இவருடைய சித்தப்பா பல்லவன் என்கிற சம்பந்தம் என்பவர் அதிமுகவில் இருப்பதால் அந்த வீட்டின் சுற்றுச்சுவரில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இருப்பதால் கட்சி காழ் புணர்ட்சியின் காரணமாக திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ். ஆர் ராஜேந்திரன்  நகராட்சிக்கு அழுத்தம் கொடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி சென்று விட்டார்கள் என்று கூறி விவேகானந்தன் குடும்பத்துடன் தங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதாக கூறி வீட்டிற்கு முன்பு அமர்ந்திருந்தனர்.


அப்போது விவேகானந்தன் கூறுகையில், எங்களுடைய சொந்த இடத்தை அரசு மூலமாக இயங்கும் பள்ளிக்கு தானமாக கொடுத்து விட்டு அரசு புறம்போக்கு இடத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகிறோம், திடீரென நாங்கள் யாரும் வீட்டில் இல்லாதபொழுது திமுக நகர செயலாளர் எஸ். ராஜேந்திரன்  எங்கள் சித்தப்பா பல்லவன் அதிமுக கட்சிக்காரர் என்பதால் நகராட்சிக்கு அழுத்தம் கொடுத்து வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டார்கள். 


இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோரிடம் முறையிட்டபோது எங்களுக்கு அதைப்பற்றி தெரியாது நாங்கள் தலையிட விரும்பவில்லை அவர்கள் எங்களையே மிரட்டுவார்கள் என்று கூறி தட்டிக்கழித்து விட்டார்கள், அதனால் எங்களுக்கு வேறு வழி இல்லாததால் தற்போது சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறோம் என்று கூறினார்.

அப்போது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நகராட்சி ஆணையர் அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பொழுது விவேகானந்தரின் பாட்டி பாப்பம்மாள் திடீரென மயங்கி சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


இதனைத் தொடர்ந்து தங்கை ஆண்டாள் திடீரென யாரும் எதிர்பாராத சமயத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்ததால் பதட்டமான சூழ்நிலை  ஏற்பட்டது, பின்பு அவர்களை தடுத்து நிறுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நகராட்சி ஆணையர் ஆகியோர் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad