அனாதையாய் இறந்தவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராக எண்ணி இறுதி காரியங்களை செய்த கிராம மக்கள். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 April 2022

அனாதையாய் இறந்தவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராக எண்ணி இறுதி காரியங்களை செய்த கிராம மக்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் கிராமத்தில் முதியவர் நடராஜன் என்பவர் குடும்பத்தினர் யாரும் இன்றி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெங்கடசமுத்திரம் பகுதியிலேயே வசித்து வந்துள்ளார். 


மேலும் பேருந்து நிறுத்தத்தில் தங்கி கிராமத்தில்  உள்ள கடைகளில் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்துள்ளார், இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக நடராஜன் இன்று பேருந்து நிறுத்தத்தில் படுத்த நிலையிலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். 


இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஆதரவின்றி கிராமத்தில் சுற்றி திரிந்து இறந்தவரை தங்களின் குடும்பத்தில் ஒருவராக நினைத்து  ஈம சடங்குகளை செய்ய முன்வந்து அவரது உடலை நல்லடக்கம் செய்ய  ஏற்பாடுகளை செய்து வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் எம்.எல்.எ வில்வனாதன் நேரில் சென்று நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இறந்த முதியவரின் இறுதி காரியங்களை செய்ய அனைத்து செலவுகளையும் தாமே ஏற்று கொள்வதாக கூறி கிராம மக்களுக்கு பண உதவி அளித்தார். 


பின்னர் கிராம மக்கள் அஞ்சலிக்கு பிறகு நடராஜனின் உடல் வெங்கடசமுத்திரம்  கிராமத்தில் உள்ள மயானத்தில்  நல்லடக்கம் செய்யப்பட்டது, ஆதரவின்றி இறந்தவருக்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து இறுதி காரியங்களை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

No comments:

Post a Comment

Post Top Ad