காளியம்மன் மகா கும்பாபிஷேகம் திருவிழாவில் வேப்ப மரம் மற்றும் அரச மரத்திற்கு பக்தர்கள் முன்னிலையில் திருமணம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 6 April 2022

காளியம்மன் மகா கும்பாபிஷேகம் திருவிழாவில் வேப்ப மரம் மற்றும் அரச மரத்திற்கு பக்தர்கள் முன்னிலையில் திருமணம்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு பகுதியில்  ஸ்ரீ காளியம்மன் ஆலய 101 ம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது, இந்த விழாவில் விடியற்காலை 5 மணி முதல் மாலை 2 மணி வரை மங்கள இசை, விநாயகர் பூஜை, புண்யாகவாசனம், தேவதாஅனுக்ஞை, மகா கணபதி ஹோமம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், அன்னதானம் வழங்குதல், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது 
அப்போது ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ விநாயகர் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கு 11 யாக சாலைகள் அமைக்கப்பட்டு 1008 கலச பூஜை 108 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றன, மேலும் 15 குறும்பர் பலகை சாமிகள்  மூன்று கரகங்கள் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டுகாசி விஸ்வநாதர் ஆலய புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டு 21 கிணறுகளில் புனித நீர் எடுத்து காளியம்மன் திருவுருவ சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பால்குடம் எடுத்து வந்து  சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கோபுரத்தின் மேலே உள்ள கலச குண்டலத்தோடு மீது புனித நீர் ஊற்றி பின்னர்  பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பக்தர்கள் கோவிந்தா  கோவிந்தா என்ற முழக்கத்துடன் பெருமாளை வழிபட்டனர் நிகழ்ச்சியில் 5000க்கும்  மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு  அம்பிகையின் இறையருளை பெற கலந்து கொண்டனர்.


திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் அவருக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, இவ் விழாவின் இறுதியில் கோவில் அருகாமையில் இருந்த வேப்ப மரம் மற்றும் அரச மரத்திற்கு பக்தர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad