புதூர் நாடு அருகே மினி வேன் கவிழ்ந்து பள்ளி மாணவி உட்பட 8 பேர் உயிரிழப்பு, தமிழக முதல்வர் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 2 April 2022

புதூர் நாடு அருகே மினி வேன் கவிழ்ந்து பள்ளி மாணவி உட்பட 8 பேர் உயிரிழப்பு, தமிழக முதல்வர் இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவிப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு அடுத்த புலியூர் கிராமத்தை சேரந்தவர்கள் 28 பேர் சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு தரிசனம் செய்ய டாடா ஏசி வாகனம் மூலம் சென்றனர். 


அப்போது வாகனம் தனது கட்டுபாட்டை இழந்து 50அடி பள்ளத்தில் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர், மேலும் பலத்த படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோரை அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில்  சுகந்தா (55) துர்கா (40) பரிமளா (12) பவித்ரா (18) செல்வி (35) மங்கை (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மேலும் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 


மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி 16 வயது ஜெயப்பிரியா என்ற பெண், மற்றும் சின்னதிக்கி ஆகிய இரண்டு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

திருப்பத்தூர் அருகே மலைப் பகுதியில் கோயிலுக்கு டாட்டா ஏசி வாகனம் மலை மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே ஊரை சேர்ந்த 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


மேலும் சம்பவம் குறித்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா விபத்தில் சிக்கியவர்களை பார்த்து ஆறுதல் கூறி மற்றும் உயிரிழந்த குடும்பத்திற்கு ஆறுதல் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரிடம் உத்தரவிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி அறிவிப்பு: இந்த விபத்து தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘‘திருப்பத்தூர் வட்டம் நெல்லிவாசல் நாடு மதுரா புலியூர் கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் சேம்பரை கிராமத்தில் உள்ள கோயிலுக்கு வேன் மூலம் சென்றபோது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்தது. 


இதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா இரண்டு லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad