நண்பனை நாசுக்காக அழைத்து சென்று குடிக்க வைத்து கொலை வெறி தாக்குதல்! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 April 2022

நண்பனை நாசுக்காக அழைத்து சென்று குடிக்க வைத்து கொலை வெறி தாக்குதல்!

திருப்பத்தூர் அருகே நண்பனை நாசுக்காக அழைத்து சென்று குடிக்க வைத்து கொலை வெறி தாக்குதல்!. தம்பி இறந்த காரணத்தினால் பழிக்கு பழி வாங்க திட்டம் தீட்டியது அம்பலம்!.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கந்திலி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த நாகராஜ் (36) என்பவரை அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் குப்புசாமி (எ) துரை (36) என்பவர் பங்களாமேடு என்ற பகுதியில் உள்ள அரசு மதுபான கடை பின் புறம் கட்டையால்  கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளார். இரத்த வெள்ளத்தில் துடி துடித்த நாகராஜை கண்டு துரை தப்பி ஓடி உள்ளார். இரத்த வெள்ளத்தில் இருந்த நாகராஜை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. குப்புசாமி (எ) துரை, நாகராஜ் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்துள்ளனர். துரை என்பவரின் தம்பி ராஜசேகர் (31) என்பவர் நாகராஜின் மனைவி சத்யா (26) என்பவர் மீது ஒரு தலை காதல் வளர்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வருட காலமாக சத்யாவுக்கு தொடர்ந்து ராஜசேகர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் தாங்க முடியாத சத்யா அவரது உடன் பிறந்த அண்ணன்களிடம் க்கொரியுள்ளார். இது குறித்து அண்ணன்கள் இருவரும் ராஜசேகரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜ்குமார் (31) என்பவர் கடந்த 06 ந் தேதி பர்கூர் அடுத்த தீர்த்தகிரிபட்டியில் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். உயிரிழப்புக்கு காரணம் சத்யாவின் அண்ணன்கள் தான் என்று அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

தம்பி இறந்த துக்கத்தில் இருந்த துரை பழி வாங்கும் எண்ணத்தில் நேற்று தனது நெருங்கிய நண்பரும் சத்யாவின் கணவருமான நாகராஜை குடிப்பதற்கு அழைத்து சென்றுள்ளார். வழக்கமாக செல்வது தானே என்று நாகராஜும் நம்பி சென்றுள்ளார். அப்போது நன்கு குடித்து விட்டு அருகில் இருந்த கட்டையை எடுத்து கண்மூடி தனமாக தலையில் தாக்கி உள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் துடி துடித்த நாகிராஜை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்து கொலை வெறி தாக்குதல் நடத்திய குப்புசாமி (எ) துரையை கைது செய்து இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர், கூடா நட்பு கேடாகும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. 

No comments:

Post a Comment

Post Top Ad