அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் துப்புரவு பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 April 2022

அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் துப்புரவு பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சியில் உள்ள திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமையில் அம்பேத்கரின் 132 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது.


இவ்விழாவை விசிக சார்பில் வெற்றிபெற்ற நகரமன்ற உறுப்பினர் வெற்றிகொண்டான் அனைத்து ஏற்பாடுகளையும் தன்னுடைய சொந்த செலவில்  செய்து ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் 36 வார்டுகளில் வெற்றி பெற்ற நகரமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு தமிழக அரசு அறிவித்த சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

பின்பு சுமார் 350க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, மேலும் அனைத்து நகர மன்ற உறுப்பினர்களுக்கும் கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது, இவ்விழாவில் திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் சிறப்பு விருதுநகர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார், இந்நிகழ்ச்சி நகரபுற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த பின்பு நடைபெற்ற முதல்பொது  நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad