திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அடியத்தூரில் ஸ்ரீ மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா ஊர் தலைவர் வீராசாமி தலைமையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஸ்ரீ படவேட்டம்மன் ஸ்ரீ காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகமும் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் கோபுரம் நவகிரகம் கொடிமரம் ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அப்போது ஸ்ரீ கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் மற்றும் கோமாதா பூஜை தீபாராதனை வழிபாடுகளும் நடைபெற்றது.

இந்த மகா கும்பாபிஷேக விழாவில் அடியத்தூர் கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
No comments:
Post a Comment