வீடு கட்டுவதற்காக ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும்போது ஒன்றரை அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டெடுப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 18 April 2022

வீடு கட்டுவதற்காக ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும்போது ஒன்றரை அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டெடுப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு  ஊராட்சி பகுதியில் வீடு கட்டுவதற்காக பால் வியாபாரி  ரமேஷ் என்பவர் ஜேசிபி இயந்திரம்  மூலம் பள்ளம் தோண்டி கொண்டு இருந்துள்ளார் அப்போது 5 அடிக்குமேல் தோண்டிய போது கற்கள் தென்பட்டுள்ளது உடனடியாக அதை மெதுவாக எடுத்து பார்த்தபோது அது பழங்காலத்து சிவலிங்கம் என்பது தெரியவந்தது.


உடனடியாக இந்த தகவல் காட்டுத்தீ போல் அருகில் உள்ள கிராமம் முழுவதும் பரவியதால் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மக்கள் குவிந்து சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர் இதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த ஆம்பூர் வட்டாட்சியர் பழனி மற்றும் உமராபாத் காவல்துறையினர் சிவலிங்கத்தை கைப்பற்றி  வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர் இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது வேலூரில் உள்ள தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் நாளை சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/