மழையில் கழிவுநீருடன் மழை நீர் கலந்து வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 18 April 2022

மழையில் கழிவுநீருடன் மழை நீர் கலந்து வீட்டுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி 35வது வார்டுக்குட்பட்ட அண்ணா நகர், டி எம் எஸ் காலனி, கலைஞர் நகர், ஆறுமுகனார்தெரு, அண்ணா நகர் மேற்கு, போன்ற பகுதிகளை உள்ளடக்கிய 7,000 பேர் கொண்ட பெரிய வார்டு இந்த வார்டில் வசிக்கும் பொதுமக்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை பெரும்பாலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பட்டியல் இனத்தைச் சார்ந்த மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர்கள் என்னதான் நகரத்தின் மையத்தில் இருந்தாலும் கூட போதுமான வசதிகள் எதுவும் சரியாக சென்றடைவதில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது தற்போது பெய்த மழையில் மழைநீர் கழிவுநீர் கால்வாய்களில் நிரம்பி அங்கு வசிக்கும் வீடுகளில் புகுந்து உள்ளன. அப்பகுதி மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கின்றனர் இது ஒன்றும் அப்பகுதி மக்களுக்கு புதிதல்ல ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் பொழுதும் இதே போன்று மழைநீர் கழிவுநீர் கால்வாய்களில் நிறைந்து வீடுகளில் புகுந்து சேதம் அடைவது வாடிக்கையாக உள்ளது .இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்களும் அப்பகுதி வார்டு உறுப்பினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை மேலும் டிஎம்எஸ் காலனியில் வசிக்கும் மக்களில் பலரும் நகராட்சி ஊழியர்கள் இவர்கள் நாள்தோறும் கழிவுகளை சுத்தம் செய்து விட்டு வந்தாலும் கூட அவர்களின் கழிவுநீர்க் கால்வாய்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை அப்பகுதி வார்டு உறுப்பினர் பலமுறை நகரமன்ற கூட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை அமைக்க கோரியும் கால்வாய்களை தூர் வாரி, சாலையை உயர்த்தி அமைக்க கோரியும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். இருந்தும் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்கவில்லை என குறிப்பிடுகிறார்.


மேலும் மழைநீர் கழிவுநீர் கால்வாய்களில் கலந்து வீடுகளில் புகுந்து நிரம்பி தேங்குவதாலும் தெருக்களில் நிரம்பி குட்டைப்போல் தேங்குவதாலும் பகுதி மக்களுக்கு காலரா, மலேரியா, டெங்கு, போன்ற பல்வேறு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது மட்டுமல்லாமல் கழிவு நீரில் உள்ள புழுக்கள் விஷ பூச்சிகளும் மழை நீரில் கலந்து வீட்டுக்குள் செல்கின்றன எனவே எங்களுக்கு விரைவில் இப்பிரச்சனைக்கு சரியான தீர்வினை செய்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் வார்டு உறுப்பினரும் சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் சட்டமன்ற உறுப்பினரும் கண்டு கொள்வார்களா?! 

No comments:

Post a Comment

Post Top Ad