மாவட்டத்தில் சுமார் ஒரு மணி நேரமாக கன மழை கொட்டி தீர்த்தது. வெப்பத்தின் தாக்கம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 17 April 2022

மாவட்டத்தில் சுமார் ஒரு மணி நேரமாக கன மழை கொட்டி தீர்த்தது. வெப்பத்தின் தாக்கம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, ஆலங்காயம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது.

ஏற்கனவே கேரளா கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை அறிவித்திருந்த நிலையில் இன்று சுமார் ஒரு மணி நேரமாக இடி மின்னலுடன் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே கன மழை பெய்துள்ளதால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.


இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad