திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் முத்தமிழ் விழா நிறைவு!! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 April 2022

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் முத்தமிழ் விழா நிறைவு!!

திருப்பத்தூர் மாவட்டம், தூய நெஞ்சக் கல்லூரியில் வீரமாமுனிவர் தமிழ் மன்றம், தமிழ்முதுகலை & ஆய்வுத்துறை  தூய நெஞ்சக் கல்லூரி இணைந்து இரண்டு நாட்களாக நடைபெற்ற முத்தமிழ் விழா நிறைவு பெற்றது.


இந்த நிறைவு விழாவில், தமிழ்துறை தலைவர் (பிரிவு 2) பேராசிரியர், பி.பாலசுப்ரமணியம் வரவேற்றார். கல்லூரியின் கூடுதல் முதல்வர் அருட்திரு. முனைவர், மரியா ஆரோக்கியராஜ் தலைமை உரையாற்றினார். கல்லூரியின் துணை முதல்வர் (பிரிவு 2) முனைவர், தியோஃபில் ஆனந்த் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் அவர்களை முனைவர். ஆ. சந்திரன் அறிமுகம் செய்து வைத்தார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவர், முனைவர். மதிப்புமிகு. சின்னப்பன் அவர்கள் கலந்து கொண்டு, தமிழ் மொழியின் சிறப்பு, வீரமாமுனிவர் தமிழ் மன்றத்தின் பணிகளை குறித்தும் சிறப்பான  உரை நிகழ்த்தினார். 

இந்த நிகழ்வில் தமிழ்துறை தலைவர், பொன். செல்வகுமார் அவர்கள், உதவி பேராசிரியர், ஆ.பிரபு, பேராசிரியர் சிவ சந்திரகுமார், BKB ஜுவல்லர்ஸ் உரிமையாளர், திரு. கணேஷ்மல் காமராஜர் கல்வி அறக்கட்டளை நிறுவனர், திரு. ஆனந்தகுமார், திரு. ராதாகிருஷ்ணன் சமூக ஊடக மையம், உட்பட கல்லூரி பேராசிரியர்கள் மாணவ -மாணவிகள் என்று திரளாக கலந்து கொண்டனர். முடிவில் முனைவர், திரு. கா.அன்பரசு அவர்கள் நன்றி கூறினார் .

No comments:

Post a Comment

Post Top Ad