பள்ளி மேலாண்மை குழு தேர்தல் கூட்டம்! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 30 April 2022

பள்ளி மேலாண்மை குழு தேர்தல் கூட்டம்!

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு தேர்தலுக்கான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை தேர்தல் பார்வையாளராக திருப்பத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. சந்திரன் அவர்கள், கலந்து கொண்டார். 


இந்த நிகழ்வில் பொம்மிகுப்பம் ஊராட்சிமன்ற தலைவர், திருமதி. தேன்மொழி வெங்கடேசன், துணைத் தலைவர் திரு. சிவகுமார், திருப்பத்தூர் மாவட்ட இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ராதாகிருட்டிணன் வார்டு உறுப்பினர்கள் திருமதி. சுகந்தி சுரேஷ், திருமதி. கோமதிஅசோகன்,  கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். 


பள்ளி மேலாண்மை குழு புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட தலைவர், துணைத் தலைவர், கல்வியாளர், உறுப்பினர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முடிவில், ஆசிரியர் பிரபாகரன் அவர்கள் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad