திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கடும் விமர்சனம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 5 April 2022

திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கடும் விமர்சனம்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் திமுக அரசின் சொத்து வரி உயர்வை திரும்ப பெற கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.


அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் கே.சிவீரமணி தேர்தலின் போது திமுக 500க்கும் மேற்பட்ட பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தனர், கடந்த 10மாதங்களாக கொடுத்த ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை ஸ்டாலின் 0% பட்ஜெட் என தமிழக சட்டமன்றத்தில் திமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்து விட்டு சொத்து வரியை 100லிருந்து 150சதவீதம் உயர்த்தி உள்ளனர்.


மதுகடைகளை மூடுவதே திமுக அரசின் வாக்குறுதி ஆனால் மதுக்கடைகளை முடினால் இலங்கையை போல் திமுகவும் ஆட்சியை இழக்கும் என பயம் உள்ளது, பெட்ரோல் விலை மாநில அரசால் 44 % குறைக்கப்படும் ஆனால் பெட்ரோல் விலையை தொடர்ந்து உயர்த்தி மத்திய அரசு மீது பழி போடுகின்றனர்.


2006ல் கலைஞர் பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்தார் அதேபோல் தற்போது 2021ல் 500க்கும் மேற்பட்ட பொய்யான வாக்குறுதிகளை ஸ்டாலின் கொடுத்து ஆட்சியை பிடித்துள்ளார். என கடும் விமர்சனம் செய்தார்.


இந்த ஆர்பாட்டத்தில் வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ்,திருப்பத்தூர் நகர செயலாளர் டி.டி.குமார் உள்ளிட்ட 1000த்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். 

No comments:

Post a Comment

Post Top Ad