துணிக்கடையில் அத்துமீறி நுழைந்து கடையை பூட்டிய கந்துவட்டிக்காரர்! நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 April 2022

துணிக்கடையில் அத்துமீறி நுழைந்து கடையை பூட்டிய கந்துவட்டிக்காரர்! நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அனுமந்த உபாசகர் பேட்டை பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி மகன் சதாசிவம் (43) இவர் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வணிக வளாகத்தில் கனிஷ்கா என்ற பெயரில் கார்மென்ஸ் மற்றும் துணி கடை நடத்தி வருகிறார்.


இவர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கந்துவட்டிக்காரன் ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனு அளித்தார், அப்போது அந்த மனுவில் திருப்பத்தூர் அடுத்த ஐயாத் நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் இன்று என்னுடைய துணிக்கடைகள் அத்துமீறி நுழைந்து கடை ஊழியர்களை மிரட்டியும் இருக்கையில் அமர்ந்திருந்த என்னை கீழே தள்ளி விட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டியும் கடையை விட்டு ஓடிவிடு இல்லையென்றால் உன்னை  நடுரோட்டில் வெட்டி போட்டு விடுவேன் என்று கூறியும்  மேலும் துணிக் கடையில் விற்பனையாகும் பணத்தை எடுத்துக்கொண்டு அத்துமீறியும் செயல்பட்டுள்ளார்.


மேலும் கடையில் இருந்த பெண் ஊழியர்களை அசிங்கமாகப் பேசியும் கடையை பூட்டி கொண்டு கடை சாவியை எடுத்துக் கொண்டும்  கணக்கு வழக்கு புத்தகத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார், எனவே இந்த நாகரீக செயலில் ஈடுபட்ட ராஜ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சதாசிவம் மட்டுமின்றி கடையில் பணிபுரியும் ஊழியர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad