வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 5 April 2022

வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த துரை நகர் பகுதியை சேர்ந்தவர் அரசு குமார் (42) ஸ்ரீராம் பைனான்ஸ் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார் இவர் கடந்த வெள்ளியன்று தனது மனைவி செந்தாமரை மற்றும் கவிஸ்ரீ, தென்னரசு, மற்றும் செந்தாமரையின் தாயார் வசந்தா ஆகிய 5 பேரும் குடும்பத்தோடு திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர்.


இதனை அறிந்த மர்ம நபர் அன்று இரவு 12.38 மணி அளவில் கடப்பாறையை கொண்டு முன் இரும்பு கேட்டை உடைத்து உள்ளே புகுந்து ஒரு பவுன் தங்க நகை மற்றும் ஐந்தாயிரம் பணம் கொள்ளையடித்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதனை அறிந்த பக்கத்து வீட்டுக்காரர் உடைக்கப்பட்டு இருந்ததை அறிந்து அரசு குமாருக்கு  தகவல் தெரிவித்தார். பின்னர் குடும்பத்தோடு வீடு திரும்பிய அரசு குமார் திருடு போனதை அறிந்து சிசிடிவி காட்சிகளை வைத்து திருப்பத்தூர் நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.


பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.அதேபோல் அதே பகுதியில் உள்ள நாராயணசாமி  என்பவரது வீட்டில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து  கொள்ளை அடிக்க முற்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad