இரு சக்கர வாகன தொடர் திருட்டு நடைபெற்று வந்த நிலையில் 2 வாலிபர்கள் கைது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 May 2022

இரு சக்கர வாகன தொடர் திருட்டு நடைபெற்று வந்த நிலையில் 2 வாலிபர்கள் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மேற்கு ரயில்வே காலனி பகுதியில் வசிப்பவர் மணிராஜ் மகன் அனுப் சிங்(30). இவர் திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் இன்று திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரில் உள்ள தின சந்தை அங்காடிக்கு சென்று காய்கறிகள் வாங்குவதற்காக  தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.


காய்கறிகள் வாங்கி திரும்பிய அனுப் சிங் தான் நிறுத்தி விட்டு சென்ற இருசக்கர வாகனத்தை காணாமல் பதறிப்போய் திருப்பத்தூர் நகர காவல் உதவி ஆய்வாளர் பிரவீனுக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தகவலறிந்து திருப்பத்தூர் நகரப் பகுதி முழுவதும் காவலர்களுடன் அலசி ஆராய்ந்த உதவி ஆய்வாளர் பிரவீன் அனுப் சிங் கொடுத்த  இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில்  திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியில் புகார் தெரிவிக்கப்பட்ட என்னுடன் கூடிய வாகனத்தை ஓடிச் சென்ற வாலிபர்களை மடக்கிப் பிடித்ததில்  திருப்பத்தூர் நகர பகுதியை சார்ந்த போஸ்கோ நகர் பகுதியில் வசிக்கும் தாவீது மகன் கிறிஸ்டியான் (40) மற்றும் திருப்பத்தூர் காந்தி ரோடு பகுதியில் வசிக்கும் வெங்கடேசன் மகன் பாண்டியன் (32) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.


இதனைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து திருடிச் சென்ற வாலிபர்களை கைது செய்து வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.


மேலும் திருப்பத்தூர் நகர பகுதியில் நீண்ட நாட்களாக தொடர்ந்து வந்த இருசக்கர வாகன திருட்டில், தற்பொழுது கைது செய்யப்பட்ட வாலிபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்கிற கோணத்தில் காவல்துறை சார்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad