மண் கடத்தல் கும்பலால் தார் சாலைகள் பழுதடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 May 2022

மண் கடத்தல் கும்பலால் தார் சாலைகள் பழுதடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா கூத்தாண்டகுப்பம் ஊராட்சியில்  பெருமாள் கோயில் வட்டம்  அருகில் சட்டத்துக்கு புறம்பாக அரசு அனுமதி பெறாமல் அரசு புறம்போக்கு நிலத்தில்  தினமும் மண் லோடுகளை கனரக வாகனங்களில் திருட்டு தனமாக எடுத்துச் செல்வதால் தார் சாலை பழுதடைவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


சட்டத்திற்கு விரோதமாக 4 யூனிட் கொள்ளளவு கொண்ட ஒரு லோடு நொரம்பு மண்ணை ரூ 3500 விதம் கடத்தல்காரர்கள் விற்றுவருகிறார்கள். இதனால் மண் எடுக்கப்பட்ட இடத்திலிருந்து  1 கி மீ செல்லும் தார் சாலை முழுவதும் சேதமடைந்து தார் சாலை மண் சாலையாகவருகிறது.  இது சம்பந்தமாக நாட்றம்பள்ளி வருவாய் துறையினருக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இதற்கு உடந்தையாக இருக்கின்ற ஊராட்சி மன்ற  தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.


அது மட்டுமின்றி ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  அரசு சார்ந்த அனைத்து பணிகளையும் அவரே முன் நின்று செயல்படுத்தி வருகிறார் ஊராட்சியில் நடைபெறும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிய புதிய அட்டை வாங்குவதற்கு ரூபாய் 100  கேட்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் ஊராட்சியில் நடைபெறும் அரசு சார்ந்த வேலைகளுக்கு ஒப்பந்ததாரரிடம் கமிஷன் கேட்பதாகவும் மேலும் பசுமை வீடு திட்டத்தில் பயனாளிகளிடம் ரூபாய் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் கேட்பதாகவும் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.


இதனைத் தொடர்ந்து உடனடியாக இவர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad