திருப்பத்தூர் மாவட்டத்தில் 208 ஊராட்சி பகுதிகளிலும் தங்குதடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 15 May 2022

திருப்பத்தூர் மாவட்டத்தில் 208 ஊராட்சி பகுதிகளிலும் தங்குதடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவு.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் திரு.அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது அப்போது அவர் பேசுகையில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் பண்ணை குட்டை அமைக்கும் பணிகளை வருகின்ற ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். 


மேலும் 100 நாள் வேலை நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்ய வேண்டும் மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் ரூபாய் 34 , 84 கோடி மதிப்பில் 332 பணிகள் நடைபெற்று வருகிறது இப்பணிகளில் 320 பணிகள் மற்றும் முடிக்கப்பட்டுள்ளது மீதமுள்ள பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் ,மாவட்டத்தில் 208 ஊராட்சி பகுதிகளிலும் தங்குதடையின்றி குடிநீர் வழங்க வேண்டும், சாலை வசதிகள்2,3, மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள தனிநபர் கழிப்பிடம் வீடுகள் ஆகிய பணிகள் முடிவடைந்து முடிக்கப்பட வேண்டும்.


மரக்கன்றுகள் நடும் திட்டம் திட்டத்தின் கீழ் 62 ஆயிரத்து 510 மரக்கன்றுகள் வருகின்ற ஜூன் மாதத்துக்குள் நடவு செய்திருக்க வேண்டும் மேலும் 1.லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து நடுவதற்கு நடவடிக்கை எடுக்க படவேண்டும் மேலும் நிலுவையில் உள்ள அங்கன்வாடி கட்டிட பணிகள் விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என பேசினார். 

No comments:

Post a Comment

Post Top Ad