எருது விடும் திருவிழா! 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறி பாய்ந்தன. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 25 May 2022

எருது விடும் திருவிழா! 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறி பாய்ந்தன.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகரில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார், மேலும் பொதுமக்கள் மற்றும் கிராம இளைஞர்கள் முன்னிலையில் 250-க்கும் மேற்பட்ட காளைகள் உரிய பாதுகாப்பு வசதியுடன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு எருது விடும் திருவிழா நடைபெற்றது. 


இதில்  தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும்  ஆந்திரா மாநில  சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்து ஓடின, அதனை தொடர்ந்து எருது விடும் திருவிழாவில்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுபிடி வீராகள் மற்றும் ஊர்பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் குறைந்த நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொலைவை கடந்து காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் முதல் பரிசாக 1 லட்சம் ரூபாய் மற்றும் இரண்டாம் பரிசு 75 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 50 வரையிலான சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன, மேலும் பாதுகாப்பு பணியில் ஜோலையார்பேட்டை  போலீசார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad