6 நாட்களாக நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் திருப்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட திருப்பத்தூர் கொரட்டி கந்திலி ஜோலார்பேட்டை புதூர் நாடு ஆண்டியப்பனூர் ஆகிய 6 பிரிக்கா பகுதிகளில் இருந்து வருவாய் துறை வட்ட வழங்கல் பிரிவு சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு உள்ளிட்ட 10 துறைகளின் கீழ் 601 மனுக்கள் பெறப்பட்டு 130 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. மேலும் 471 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
இதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் முதியோர் உதவித்தொகை விதவை உதவித்தொகை புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் 130 பயனாளிகளுக்கு 6,80,570 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும் விழாவில் பேசிய ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளருமான தேவராஜ் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை அதற்கு நாங்கள் மட்டும் சரியாக இருந்தால் போதாது 100 விழுக்காடு அனைவரும் சரியாக இருக்க வேண்டும். குறிப்பாக விஏஓ க்கள் மாத ஓய்வூதியம் விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு வருகின்ற பொதுமக்களை பல நாட்கள் அலைய விடுகிறார்கள். ஜமாபந்தி, மனுநீதி முகாம் போன்ற நாட்களில் மட்டும் கொடுத்து விடுகிறார்கள். அதற்கு வேறு காரணமும் இருக்கிறது. எனவே எங்களோடு சேர்ந்து அனைவரும் ஒத்துழைத்தால் மட்டுமே ஆட்சியின் காட்சி மாறும் என்று கூறினார்.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் இதர மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் பயனாளிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment