சீமானை கைது செய்ய வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 May 2022

சீமானை கைது செய்ய வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள இந்திரா காந்தி சிலை மணிமண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியை கொச்சையாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி  மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தினேஷ் குமார் தலைமையில் அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாநில பொதுச்செயலாளர் கிஷோர் பிரசாத் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து சுமார் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் கைகளில் காங்கிரஸ் கொடி ஏந்தி, பாலியல் குற்றவாளி சீமானே பெண்களை இழிவுபடுத்தி பேசாதே, கைது செய் கைது செய் சீமானை தேசத் துரோக வழக்கில் கைது செய் உள்ளிட்ட வாசகங்களை கோஷங்களாக எழுப்பி சீமானுக்கு எதிராக  தங்களுடைய கண்டனத்தை தெரிவித்தனர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில காங்கிரஸ் சோனியா பேரவைத் தலைவர் முல்லை சம்பங்கி ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad