நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு அனுமதிச் சீட்டு இலவசம் ரசிகர்கள் மகிழ்ச்சி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 May 2022

நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு அனுமதிச் சீட்டு இலவசம் ரசிகர்கள் மகிழ்ச்சி.

திருப்பத்தூர் மாவட்டம்  திருப்பத்தூர் பகுதியில் திருமகள் திரையரங்கில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு திருப்பத்தூர் ரசிகர் நற்பணி மன்ற நகர தலைவர் தமிழ் மணியின் சொந்த செலவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மட்டுமின்றி அணைத்து நகரமன்ற உறுப்பினர்களுகும்இலவச அனுமதி சீட்டு வழங்கப்பட்டது.

அப்போது திருப்பத்தூர் நகர திமுக செயலாளர் ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக திரைப்படத்தை காண அழைக்கப்பட்டார். மேலும் இத்திரைப்படம் வெள்ளி விழா காண வேண்டும் என்பதற்காக  இனிப்புகள் வழங்கப்பட்டது, இதனைத்தொடர்ந்து திரைப்படத்தை காண வரும் பொதுமக்களுக்கு சுமார் 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

திரைப்படத்தை காண அனுமதிச்சீட்டு இலவசமாக வழங்கப்பட்டது மட்டுமின்றி மரக்கன்றுகள் இனிப்புகள் கொடுக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திரைப்படத்தை காண சென்றனர், காலை காட்சி மட்டும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதிச் சீட்டு இரண்டாவது நாளாக இலவசமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

Post Top Ad