விசமங்கலம் பகுதியிலுள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிக் தனியார் மேல்நிலை பள்ளி 42 ஆம் ஆண்டு விழா. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 10 May 2022

விசமங்கலம் பகுதியிலுள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிக் தனியார் மேல்நிலை பள்ளி 42 ஆம் ஆண்டு விழா.

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள விசமங்கலம் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக  செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 670 மாணவ-மாணவிகளும் பயின்று வருகிறார்கள் விழாக்காலங்களில் பள்ளியின் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் நடந்தது. 

ஆன்லைனில் கற்றல் குறைபாடு இல்லாமல் அவர்கள் தொடர்ந்து கல்வியில் முன்னேற பள்ளியில் செயல்முறை கல்வி நடத்தப்பட்டது. மேலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன இந்நிலையில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளியில் படிக்கும் யுகேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை மழலை மாணவர்களுக்கு நாற்பத்தி இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ராஜா தலைமை வகித்தார் பள்ளியின் முதல்வர் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட மருத்துவர் இணை இயக்குனர் ஊரக நலப் பணி அலுவலர் திரு மாரிமுத்து அவர்களும் திருப்பத்தூர் தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் சிஜி சரவணன் அவர்களும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் அவர்களும் மாவட்ட கல்வி அலுவலர் திரு. வேதபிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்கள். இப்பள்ளியின் ஆசிரியர்களும், பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad