மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்து பெண் குழந்தை பலி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 10 May 2022

மரம் முறிந்து வீட்டின் மீது விழுந்து பெண் குழந்தை பலி.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக மரம் முறிந்து ஒரு வீட்டின் மீது விழுந்ததில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தை பலியானார்.


நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை விடிய விடிய பெய்தது அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கிராமம் செத்த மலை பகுதியில் வசித்து வரும் கிருஷ்ண பாலு (35) அவருடைய மனைவி சத்தியா ( 27) இவருடைய மகள் தேவிகா (6) மற்றும் கவின் (2) குழந்தைகள் 24 பேரும் இவர்கள் நேற்று இரவு வீட்டில் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த பொழுது இரவு பெய்த கனமழை காரணமாக இரண்டு மணி அளவில் வீட்டின் அருகே இருந்த வேப்ப மரம் முறிந்து கூரை வீட்டின் மீது விழுந்தது என்று சுதாகரித்துக் கொண்ட மனைவி சத்யா மற்றும் இரண்டாவது குழந்தை கவிதை தூக்கிக்கொண்டு வெளியே ஓடி வந்தார் ஆனால் மரக்கிளையில் இடுக்கில் மாட்டி கொண்ட கிருஷ்ண பாலாவுக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பினர், ஆனால் தேவிகா 6 வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது.


இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரவு பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் மீது மரம் விழுந்து குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad