வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 44 வது கிளையை மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 May 2022

வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 44 வது கிளையை மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா துவக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டையை அடுத்த ஆத்துமேடு பகுதியில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 44 வது கிளை துவக்க விழா நடைபெற்றது, விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.


இந்த புதிய கலையின் மூலமாக புதுப்பேட்டை சந்திராபுரம் அக்ராகரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 5 பயனாளிகளுக்கு சிறு வணிக கடன் 125000 ரூபாயும் அம்மனாங்கோயில்   புள்ளாநேரி கோனாபட்டு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 5 மாற்றுத்திறனாளிகள் கடன் 25000 ரூபாயும் கடனாக வழங்கப்பட்டது.


மேலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சுமார் 10 பேர் 2150000 ரூபாயை வைப்பு தொகையாக வங்கி துவக்க நிலையிலேயே வைத்தனர்.


இந்த துவக்க  விழாவிற்கு  ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் வங்கி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  

No comments:

Post a Comment

Post Top Ad