ஒன்றிய அரசை கண்டித்து, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 27 May 2022

ஒன்றிய அரசை கண்டித்து, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.

தினம், தினம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, விலை உயர்வு, வேலையின்மை, வெறுப்பு அரசியல் நடத்தும், ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து, தேசம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இதன் ஒரு பகுதியாக இன்று 27/05/22 காலை 10 மணி அளவில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     

இதில் ஆனந்தன் நகர செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சுந்தரேசன் CPI, நகர செயலாளர் காசி CPI(M) வட்டார செயலாளர், செயலாளர்கள் தலைமை தாங்கினர், கண்டன உரையாற்றிய இரா. சுபாஷ் சந்திரபோஸ் மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி, A.C.சாமி கண்ணு (CPI) மாவட்ட செயலாளர், P.சக்திவேல் (cpi-m) மாவட்ட நிர்வாகக்குழு  உட்பட கண்டனத்தை பதிவு செய்தனர்.


முக்கிய கோரிக்கையான, 

  1. பெட்ரோல் டீசல் விலை மீதான வரிகளை கைவிட்டு, விலை உயர்வுகளை மொத்தமாக திரும்பப் பெற்றிடு!
  2. ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீட்டை உயர்த்திடு!
  3. நகர்ப்புற வேலை உறுதிச் சட்டம் கொண்டு வருக!
  4. மின்சார தனியார் மயமாக்கல் ஆக்காதே! 
உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டு தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad