தொடர்ந்து 5-வது நாளாக இலவச டிக்கெட்நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை காண குவியும் பொதுமக்கள், இளைஞர்கள் தரையில் அமர்ந்து படம் பார்த்தனர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 May 2022

தொடர்ந்து 5-வது நாளாக இலவச டிக்கெட்நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை காண குவியும் பொதுமக்கள், இளைஞர்கள் தரையில் அமர்ந்து படம் பார்த்தனர்.

தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது, இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ராமக்காபேட்டை அருகே இயங்கி வரும் திருமகள் தியேட்டரில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில்  உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற திருப்பத்தூர் நகர தலைவர் தமிழ்மணி திரைப் படம் வெளியாகிய நாளிலிருந்து தொடர்ந்து இன்று வரை 5-வது நாளாக காலை காட்சிக்கு திரைப்படம் காண வரும் பொதுமக்களுக்கும் திமுக முக்கிய பிரமுகர்கள் நிர்வாகிகள் ஆகியோருக்கும் இலவசமாக வழங்கிவருகிறார்.

இதனைத் தொடர்ந்து இன்று மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் திருப்பத்தூர் நகர செயலாளர் ராஜேந்திரன் ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யா சதீஷ் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் திரைப்படம் காண வந்ததால் அரங்கு நிறைந்தது, சுமார் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தரையில் அமர்ந்து திரைப்படத்தை கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad