திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்னமுக்கனூர் ஊராட்சியை சேர்ந்த திருப்பதி இவருடைய மகன் பெயர் அண்ணாமலை வயது 24 கட்டிட தொழில் செய்து வந்தார் இவருக்கும் பரிமளா என்ற பெண்ணுக்கும் 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது இந்த நிலையில் கணவன் மனைவி இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் நேற்று முன்தினம் அண்ணாமலை மது குடித்துவிட்டு வந்தார், அப்போது கணவன் மனைவி இடையில் தகராறு ஏற்பட்டது இதனால் ஆவேசம் அடைந்த அண்ணாமலை வீட்டிலேயே தூக்கு போட்டுக் கொண்டார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு தீவிரச் சிகிச்சைப் பெற்றுக் கொண்டு வந்த அண்ணாமலை சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார், இதுகுறித்து, ஜோலார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment