தமிழக முதல்வர் அவர்கள் விவசாயிகளுக்கு, வேளான்- பொருட்கள் காணொலி காட்சி வாயிலாக வழங்கி தொடங்கி வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 May 2022

தமிழக முதல்வர் அவர்கள் விவசாயிகளுக்கு, வேளான்- பொருட்கள் காணொலி காட்சி வாயிலாக வழங்கி தொடங்கி வைத்தார்.

வேளாண்-உழவர் நலத்துறை சார்பாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தை தமிழகம் முமுவதும் நேற்று தமிழக முதல்வர் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.ம.ஸ்டாலின் அவர்கள், வீடியோ காட்சி மூலமாக தொடங்கிவைத்தார்.


நேற்று பொம்மிகுப்பம் கிராமத்தில் வேளாண்-உழவர் நலத்துறை சார்பாக பொம்மி குப்பம் கிராம வங்கி வளாகத்தில் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்றது, இந்த நிகழ்ச்சியில் வேளாண்துறை அலுவலர்கள்& வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மேகநாதன்(வே.து) கோ. இராமச்சந்திரன் இளநிலைப் பொறியாளர், திருமதி. மாலதி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஊராட்சிமன்றத் தலைவர் திருமதி. தேன்மொழி வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் எம்ஜி (எ) பூங்காவனம், துணைத் தலைவர் சிவகுமார், இராதாகிருட்டினன் சமூக ஊடக மையம் ராமச்சந்திரன், பிரீடம் பவுண்டேஷன் நிர்வாக இயக்குனர் ஊராட்சி  செயலர் ஆனந்தராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு விதைபொருட்கள், யூரியா, மருந்து தெளிப்பான் கருவிகள், உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது, இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஊராட்சிமன்ற நிர்வாகத்தின் சிறப்பான நடவடிக்கையின் மூலம் ஒலிபெருக்கி வைத்து பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad