வளையாம்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற துணை தலைவருக்கான தேர்தலில் 8 வாக்குகள் பெற்று 4 வது வார்டு உறுப்பினர் மதன் என்பவர் துணை தலைவராக தேர்வு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 25 May 2022

வளையாம்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற துணை தலைவருக்கான தேர்தலில் 8 வாக்குகள் பெற்று 4 வது வார்டு உறுப்பினர் மதன் என்பவர் துணை தலைவராக தேர்வு.

ஆலங்கயம் ஊராட்சி ஒன்றியம் வளையம்பட்டு  ஊராட்சியில் 12 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர், இதில் ஏற்கனவே வளையாம்பட்டு ஊராட்சி  துணை தலைவராக இருந்த சோபியா நவீன் குமார் என்பவர் கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் தேதி  தனது துணை தலைவர்  பதவியை ராஜினாமா செய்தார்..


இதனால் வளையாம்பட்டு  துணை தலைவருக்கான தேர்தல் 26.05.2022 அன்று  நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது, இதனை தொடர்ந்து இன்று ஆலங்கயம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் வளையாம்பட்டு ஊராட்சி மன்ற துணை தலைவருக்கான  தேர்தல் இன்று வளையாம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  வாணியம்பாடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது.


இதில் வளையாம்பட்டு  ஊராட்சி  4 வதுவார்டு உறுப்பினர்  மதன் என்பவரும் 10 வது வார்டு உறுப்பினர்  வெங்கடேசன் ஆகிய இருவரும் வளையாம்பட்டு ஊராட்சி  துணை தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தனர், பின்னர் துணை தலைவருக்கான  வாக்குபதிவு நடைப்பெற்ற நிலையில், இதில்  11வார்டு உறுப்பினர்கள் துணை தலைவர் தேர்தலில் வாக்களித்தனர்.


இத்தேர்தலில் 8 வாக்குகள் பெற்று வளையாம்பட்டு 4 ஆவது வார்டு உறுப்பினர் மதன் வளையாம்பட்டு ஊராட்சி மன்ற துணை தலைவராக வெற்றிபெற்றதாக  துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ் அறிவித்தார், இதனை தொடர்ந்து மதனின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad