ஆம்பூர் தார்வழி பகுதியில் 80 அடி கிணற்றில் தவறி விழுந்த நபர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 May 2022

ஆம்பூர் தார்வழி பகுதியில் 80 அடி கிணற்றில் தவறி விழுந்த நபர்.

ஆம்பூர் அடுத்த ரபீக் நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்கர் (45) சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் தார்வழி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள 80 அடி கிணற்றில் நேற்று  மாலை  6 மணியளவில்  தவறி விழுந்துள்ளார்,


இதனை தொடர்ந்து 3 மணி நேரத்திற்க்கும் மேலாக ஆம்பூர் தீயணைப்பு துறையினர் கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டர் மூலம் வெளியேற்றி அஸ்கரை தேடும் பணியில் ஈடுப்பட்ட வந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும்  பணி தற்காலிகமாக நிறுத்தினர்.


மீண்டும் இன்று காலை  6 மணியளவில் உடலை   தேடும் பணி தொடர்ந்த தீயணைப்பு துறையினர் 9:30 மணியளவில் அஸ்கரின் உடலை கிணற்றில் இருந்து சடலமாக மீட்டனர், மேலும் இந்நிகழ்வு குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து  உடலை பிரேத பரிசோதனைக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்...

No comments:

Post a Comment

Post Top Ad